மதுபாட்டில்களை விற்பனைக்கான வைத்திருந்த வழக்கில் அண்ணன்-தம்பி ஆகியோருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாபநாசம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
விசாரணை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் கடந்த 8.12.2016 அன்று பாபநாசம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில்தேவராயம்பேட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சீவி(வயது34), அவரது அண்ணன் முரளி(40) ஆகிய 2 பேரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
1 ஆண்டு சிைற தண்டனை
விசாரணையில் அனுமதியின்றி 672 மதுபாட்டில்களை விற்பனைக்கான வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் 672 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவி, முரளி ஆகிய 2 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல்கனி, அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய 2 பேருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.