1 டன் பழைய டயர்கள் அகற்றம்

தஞ்சை பகுதியில் 1 டன் பழைய டயர்களை அகற்றி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர;

Update: 2023-08-10 20:47 GMT

தஞ்சை பகுதியில் 1 டன் பழைய டயர்களை அகற்றி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டயர்கள் அகற்றம்

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுறுத்தலின்படி, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று 7 மற்றும் 14-வது வார்டுகளில் கீழவாசல், காந்திஜி ரோடு சாலை, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வீடுகளின் மேற்கூரைகளில், பஞ்சர் கடைகளில் அருகில் போடப்பட்டிருந்த தேவையற்ற பழைய டயர்களை எடுத்து அகற்றும் பணி நடைபெற்றது.

மாநகர்நல அலுவலர் டாக்டர்.சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையிலான குழுவினர் இந்த டயர்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். மேலும் பழைய டயர்களை சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்து, இதில் மழைநீர் தேங்கும் போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.

அபராதம் விதிக்கப்படும்

எனவே, தேவையற்ற டயர்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த பகுதிகளில் இருந்து மட்டும் 1 டன் டயர்கள் அகற்றப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் பழைய டயர்கள் மற்றும் கொசுப்புழு உற்பத்தியாகும் தேவையற்ற கலன்களை அப்புறப்படுத்தாமல் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்