வேட்டையாட முயன்ற 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

நாய்களை வைத்து வேட்டையாட முயன்ற 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Update: 2023-02-08 18:45 GMT

கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட மத்தளம்பாறை பீட் வெளிமண்டல பகுதியான பூவனூர் என்ற கிராமத்தில் நாய்களை வைத்து வேட்டையாட முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.

அப்போது தென்காசியை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 28), பூவனூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (26), முருகன் (19), சாம்ராஜ் (20) ஆகிய 4 பேர் நாய்களை வைத்து வேட்டையாட முயன்றது தெரியவந்தது. 4 பேரையும் கையும், களவுமாக வனத்துறையினர் பிடித்து வழக்குப்பதிவு செய்தனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில், தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்