காரில் விற்பனைக்காக வைத்திருந்த 1½ கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் விற்பனைக்காக வைத்திருந்த 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-02 18:26 GMT

காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அதில் இருந்தவர்களை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ரங்காபுரத்தை சேர்ந்த ரகீம் (வயது 21), கோபி (28), ஐசக் (24) மற்றும் 19 வயது வாலிபர் ஒருவர் என தெரியவந்தது.

காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் 1½ கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் 4 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து காரில் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

போலீசார் காரையும், 1½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து 4 வாலிபர்களையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்