1 மணி நேரம் பலத்த மழை

அருப்புக்கோட்டையில் 1 மணி ேநரம் பலத்த மழை பெய்தது. தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-05-30 18:45 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் 1 மணி ேநரம் பலத்த மழை பெய்தது. தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பரவலான மழை

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் பரவலான மழை பெய்து வருகிறது. அதேபோல நேற்று காலை முதலே கடுமையான வெயில் அடித்தது. வழக்கம் போல் மாலை வேளையில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து பலத்த மழையாக பெய்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ஆத்திபட்டி, காந்திநகர், ராமசாமிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.இந்த மழை காரணமாக பல இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.தாழ்வான பகுதிகளில் மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து சென்றது.ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர்மழையினால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்மழை விவசாயத்திற்கு பயன்அளிக்கும் என மகிழ்ச்சியுடன் விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்