திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு மின் ஏலம் மூலம் ரூ.1¾ கோடி வருவாய்
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு மின் ஏலம் மூலம் ரூ.1¾ கோடி வருவாய் கிடைத்துள்ளது.
வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் இந்திய ரெயில்வே வணிக வருவாய் மற்றும் கட்டணமில்லா வருவாய் ஒப்பந்தங்களுக்கான மின் ஏலத்தை கடந்த மாதம் 25-ந்தேதி அறிமுகப்படுத்தியது. ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த மின் ஏலத்தின் மூலம் தெற்கு ரெயில்வேயில் உள்ள 6 கோட்டங்களில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 64 வணிக ஒப்பந்தங்களை மேற்கொண்டு ரூ.34.60 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் திருச்சி கோட்டம் மொத்தம் ரூ.1 கோடியே 72 லட்சத்துக்கு 7 ஒப்பந்தங்களை வழங்கி உள்ளது. இதில் ரூ.1.68 கோடிக்கு 4 பார்க்கிங் ஒப்பந்தங்களும், ரூ.3.5 லட்சத்துக்கு ரெயில் நிலைய கட்டண கழிப்பறைகளை பராமரிக்கும் 3 ஒப்பந்தங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.