ரூ.1 கோடியில் மருத்துவ கட்டிடம்- அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தனர்

ரூ.1 கோடியில் மருத்துவ கட்டிடத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தனர்.;

Update: 2023-09-08 18:51 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டிடம், ரூ.25 லட்சத்தில் முனைவென்றி செவிலியர் குடியிருப்பு, ரூ.10 லட்சத்தில் மல்லாக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வக கூடுதல் கட்டிடம், ரூ.15 லட்சத்தில் துணை செவிலியர் மற்றும் தாதியர் பயிற்சி பள்ளி விடுதி கூடுதல் கட்டிடம் ஆகியவை ரூ.1 ேகாடியே 2 லட்சம் செலவில் புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டப்பட்டன.

இதன் திறப்பு விழாவுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., துணை இயக்குனர் விஜய் சந்திரன், திட்ட இயக்குனர் சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி அன்புச்செழியன், சிங்கம்புணரி தி.மு.க. நகர அவைத்தலைவர் சிவக்குமார், பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன், திருப்புவனம் சேர்மன் சேங்கை மாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர்(வடக்கு) பூமிநாதன், (தெற்கு)பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், நகர செயலாளர் கதிர்வேல், ஒன்றிய அவைத்தலைவர் ராசு, பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய துணைச்செயலாளர்கள் சிவபுரி சேகர், முத்துக்குமார், ஷீலா சொக்கநாதன், துணை நகர செயலாளர் அலாவுதீன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், தனுஷ்கோடி, பிரான்மலை ஞானசேகரன், மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர்கள் புகழேந்தி, சூரக்குடி சிவசுப்பிரமணியன், தொழிலாளர் அணி துணைத்தலைவர் ஞானி செந்தில், ஒன்றிய இளைஞரணி மனோகரன், மாடன் சையது, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம், மல்லிகா மெடிக்கல் செந்தில்குமார், அழகுராஜ், மருத்துவ அலுவலர் நபிஷா பானு, டாக்டர்கள் செந்தில், செந்தில்குமார், தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திர குமார், (கிராம ஊராட்சி) லட்சுமண ராஜு பிரான்மலை ஊராட்சி செயலர் பழனியப்பன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்