ரூ.1 கோடி மோசடி; தம்பதி மீது தென்மண்டல ஐ.ஜி.யிடம் புகார்

ரூ.1 கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது தென்மண்டல ஐ.ஜி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-07-21 20:24 GMT

மதுரை விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்-ஜான்சிராணி தம்பதி அந்த பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 80-க்கும் மேற்பட்டோரிடம் தீபாவளி சீட்டு பண்டு நடத்தி மாதம் 300 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை பெற்று வந்துள்ளனர். சீட்டு 11 மாதம் முடிவடைந்த நிலையில் அந்த பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் தென்மண்டல ஐ.ஜி.யிடம் இது குறித்து புகார் அளித்தனர். அதில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் என தென் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அவர்கள் பணத்தை மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்