லாட்டரி சீட்டுகள் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
குளித்தலை தாலுகா நச்சலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது இனுங்கூர் வ.உ.சி. நகரை சேர்ந்த கனகா (வயது 29), பங்களா புதூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (39), நச்சலூர் கடை வீதி பகுதியை சேர்ந்த அன்புகுமார் (46) ஆகியோர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.