ஆசிரியரின் மனைவியிடம் தாலிச்சங்கிலி பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை; திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பு

CourtOrder;

Update: 2022-11-15 16:56 GMT

நத்தம் அசோக் நகரை சேர்ந்தவர் டேவிட் சிவஞானம். அரசு பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி ராஜவள்ளி (வயது 32). கடந்த 2013-ம் ஆண்டு ராஜவள்ளி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ராஜவள்ளி அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து நத்தம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேர்வீடு பகுதியை சேர்ந்த வீராசாமி (45), பெரிய மலையூரை சேர்ந்த சங்கர் (40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது திண்டுக்கல் சப்-கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். அரசு தரப்பில் வக்கீல் ஆர்.கே.சண்முக பார்த்திபன் வாதாடினார்.

பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட வீராசாமி, சங்கர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மீனாசந்திரன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்