வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஆற்காடு
வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திமிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 22), கோபிநாத் (19) ஆகியோர் வழிப்பறி மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி ஸ்ருதி பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு காவலில் வைக்க கலெக்டர் வளர்மதி உத்தரவு பிறப்பித்தார். அதற்கான நகல் இருவரிடமும் வழங்கப்பட்டது.