விடுதலை போராட்ட வீரரான சங்கரய்யாவுக்கு வயது 102; தலைவர்கள் வாழ்த்து

விடுதலை போராட்ட வீரரான சங்கரய்யா, 102-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.;

Update:2023-07-16 14:36 IST

விடுதலை போராட்ட வீரரும், தகைசால் தமிழருமான என்.சங்கரய்யா தனது 102-வது பிறந்தநாளை நேற்று சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் எளிமையாக கொண்டாடினார்.

இதையொட்டி குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், என்.குணசேகரன், எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் சந்தன மாலை அணிவித்து, பழக்கூடை கொடுத்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சங்கரய்யாவுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார். அப்போது பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் கோ.காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மகேந்திரன், குரோம்பேட்டை நாசர், சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ப.சுந்தர்ராஜன், பி.ஜான்சிராணி, ஏ.ஆறுமுகநயினார், வே.ராஜசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், பொருளாளர் கே.பி.பெருமாள், துணைத்தலைவர்கள் பி.டில்லிபாபு, முகமதுஅலி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம், பொருளாளர் அ.பழனிச்சாமி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். பாலர் பூங்கா குழந்தைகள் புடைசூழ என்.சங்கரய்யா கேக் வெட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்