ஊட்டியில் பெய்த பலத்த மழையினால் மண்சரிவு

ஊட்டியில் பலத்த மழை பெய்ததோடு எல்லநள்ளியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் வாகனங்கள் தப்பின.

Update: 2023-06-12 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் பலத்த மழை பெய்ததோடு எல்லநள்ளியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் வாகனங்கள் தப்பின.

மண்சரிவு

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

இதனிடையே எல்லநல்லி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்து கனமழையால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் எல்லநள்ளியிலிருந்து கேத்தி செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் மழை நின்றவுடன் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

பந்தலூர்

பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் மதியம் வரை வெயிலும், பின்னர் மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி நேற்றும் பந்தலூர், எருமாடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எருமாடு கிராம நிர்வாக அலுவலகம் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதேபோல் உப்பட்டி, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, சேரம்பாடி, கரியசோலை உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்