சென்னிமலை அருகே குட்டியுடன் தோட்டத்துக்குள் புகுந்த புள்ளிமான் தெருநாய்கள் துரத்தியதால் ஓட்டம்

தெருநாய்கள்

Update: 2023-04-17 22:02 GMT

சென்னிமலை அருகே தோட்டத்துக்குள் புள்ளிமான் ஒன்று குட்டியுடன் புகுந்தது. அப்போது தெருநாய்கள் துரத்தியதால் குட்டியை விட்டுவிட்டு தாய் மான் ஓடிவிட்டது.

1,700 ஏக்கர்

சென்னிமலை வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வனப்பகுதியில் மான்கள், மயில்கள், குரங்குகள் ஆகியவை ஏராளமாக உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.

இதனால் வனப்பகுதியில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதன்காரணமாக தண்ணீரை தேடி அடிக்கடி மான்கள் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று விடுவது வழக்கம்.

குட்டியுடன் வந்த புள்ளிமான்

இந்த நிலையில் சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி பிரிவு பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புள்ளிமான் ஒன்று பிறந்து ஒரு மாதமே ஆன தனது குட்டியுடன் புகுந்தது.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த தெருநாய்கள் மானையும், அதனுடன் வந்த குட்டிமானையும் விரட்ட தொடங்கியது. இதை கண்டதும் புள்ளிமான் தனது குட்டியை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதனால் ெதருநாய்களிடம் குட்டிமான் சிக்கியது.

மீட்பு

இதை தற்செயலாக தேவராஜ் குடும்பத்தினர் கண்டனர். குட்டி மானை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்க தொடங்குவதற்குள் தேவராஜ் குடும்பத்தினர் ஓடிச்சென்று அதை காப்பாற்றி மீட்டனர். பின்னர் ெதருநாய்களை அங்கிருந்து விரட்டி விட்டனர். உடனே அவர் இதுகுறித்து சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று குட்டிமானை கைப்பற்றி அதற்கு தண்ணீர், பால் ஆகியவற்றை கொடுத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'குட்டிமானை அதனுடைய தாய் மான் பிரிந்து சென்ற இடத்திலேயே தேடி வரும். எனவே குட்டிமானை அதன் தாயுடன் சேர்த்து வைக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஒருவேளை தாய் மான் வராவிட்டால் குட்டிமானை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று பராமரித்து பின்னர் வனப்பகுதியில் உள்ள மற்ற மான்களுடன் சேர்த்து விடப்படும்,' என்றனர். தாய் மானை பிரிந்து தவித்த குட்டிமானை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்