குளத்துப்பாளையத்தில் குதிரை பந்தயம்

குளத்துப்பாளையத்தில் குதிரை பந்தயம்

Update: 2022-12-03 18:45 GMT

நெகமம்

நெகமம் அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் குளத்துப்பாளையம்புதூர்- நெகமம் சாலையில் குதிரை பந்தயம் நடந்தது. இந்த போட்டியில் பொள்ளாச்சி, பல்லடம், பழனி, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை போன்ற இடங்களிலிருந்து சுமார் 80-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டது. குதிரைகளை சின்ன குதிரை வண்டி, நடு குதிரை வண்டி, பெரிய குதிரைவண்டி மற்றும் பெரிய குதிரை, நடுகுதிரை போன்ற பிரிவுகளில் பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற குதிரை வண்டிகள் மற்றும் குதிரைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. குதிரைகள் பாய்ந்து வந்த காட்சி பாதையின் இருபுறமும் நின்ற பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்