தொடர் மழையால் வீடு இடிந்து சேதம்
அருப்புக்கோட்டை அருகே தொடர் மழையால் வீடு இடிந்து சேதமானது.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் மங்கையன். இவரது மனைவி மருதாயி (வயது80). மங்கையன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். மல்லாயி மட்டும் தனது ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். பாளையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்தநிலையில் இரவில் மல்லாயி வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் எழுந்து பார்த்தபோது வீட்டின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. இவர் மற்றொரு அறையில் படுத்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.