குன்றாண்டார்கோவில் பகுதியில் உள்ள கிள்ளனூர், வாலியம்பட்டி ஆவுடையாம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் உள்ள அம்மன் தங்கபொட்டு 2, வெள்ளி காப்பு 2, விளக்கு, தாம்பாலம் உள்ளிட்ட வெண்கல பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கிள்ளனூர் அடைக்கலம் காத்தார் கோவில் பூசாரி குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.