திருவாரூர் மாவட்டத்தில், பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

politician protest;

Update: 2022-11-15 18:45 GMT

திருவாரூர்;

பால் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆா்ப்பாட்டம்

பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வாி உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் அமுதா நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மூத்த நிர்வாகி சந்திரன், தரவுத்தள மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் அருண், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் மாரிமுத்து, நகர பொதுச்செயலாளர் கோவை நடராஜன், நகர பொருளாளர் ரமேஷ், நகர துணைத்தலைவர் சேகர், நகர செயலாளர் ராஜா பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா ஒன்றியத்தலைவர் வாஞ்சிமோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் சுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் சரவணன், அறிவுராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூத்தாநல்லூரில் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜனதா சாா்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில், மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரசாந்த் தலமையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர்

கோட்டூர் கடைவீதியில் பா. ஜனதா கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் அரவிந்த் தலைமை தாங்கினார் இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன், மாவட்ட துணை தலைவர்கள் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

பால் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடி பந்தலடியில் பா. ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் ரகுராமன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்ட சிறுபான்மையணி தலைவர் கமாலுதீன் மற்றம் பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா நகர தலைவர் அய்யப்பன், தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், மற்றும் ரஜினிகலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா. ஜனதா கட்சியினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

குடவாசல்

குடவாசல் ஒன்றிய பா.ஜனதா சார்பில் குடவாசல், விஷ்ணுபுரம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.குடவாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியதலைவர் சாமி தலைமை தாங்கினார். விஷ்ணுபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.பேரளத்தில் பா. ஜனதா கட்சியினர் பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கதாஸ்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்