குடியாத்தம்
குடியாத்தம் தெற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஒன்றிய பொது செயலாளர் கலைவாணன், இளவரசன் உள்பட ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர் பாபு, மாவட்ட துணை தலைவர்கள் ஸ்ரீகாந்த், சுகுமார், மாவட்ட செயலாளர் லோகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சந்திரமவுலி, மாவட்ட செயலாளர் ரமேஷ், முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாநில செயலாளர் விநாயகமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் ரங்கநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக குடியாத்தம் நகர பா.ஜ.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே நகர தலைவர் ராஜாசெல்வேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் வடக்கு ஒன்றியம் சார்பில் பரதராமியில் ஒன்றிய தலைவர் ரூபேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.