அம்பேத்கர் சிலை, பூங்கா அமைக்க இடம் ஒதுக்கித்தர வேண்டும்
Ambedkar statue and park should be reserved
திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் இரா. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சந்தித்து மனு அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூரில் ஜோலார்பேட்டை மெயின் ரோட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் மற்றும் காமராஜர் சிலை வைக்கப்பட்டு அவர்களது நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் அன்று அனைத்துக் கட்சி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். தற்போது வாணியம்பாடி முதல் சேலம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுவதால் அம்பேத்கர் மற்றும் காமராஜர் சிலைகள் அகற்றப்பட உள்ளதாக தெரிய வருகிறது ஆகையால் அதே பகுதியில் பின்புறம் அரசு புறம்போக்கு இடத்தில் 10 சென்ட் நிலத்தை ஒதுக்கி பூங்கா அமைத்து அங்கு அம்பேத்கர் மற்றும் காமராஜர் சிலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அப்போது ஜோலார்பேட்டை நகர செயலாளர் வின்சென்ட், தொகுதி செயலாளர் புரட்சி நம்பி என்ற சிவா, வாணியம்பாடி தொகுதி செயலாளர் கோவேந்தன். உள்பட பலர் இருந்தனர்.