மணல் கடத்தல்; மாட்டுவண்டி பறிமுதல்

கடலூாில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-29 18:45 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று முன்தினம் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றங்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் மாட்டி வண்டியில் மணல் அள்ளி கடத்தி சென்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த நபர் மாட்டுவண்டியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்