பல்லடத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு - போலீசார் விசாரணை

பல்லடத்தில் கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-17 05:30 GMT

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடையின் மேற்கூரை உடைத்து உள்ளே இறங்கி பணம் திருடிய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பல்லடம் நால்ரோடு பகுதியில், பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வருபவர் சுந்தரம் (வயது62), இவர் 2 நாள் விடுமுறை அடுத்து நேற்று காலை கடையை திறக்க வந்துள்ளார். திறந்து உள்ளர் சென்றபோது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது. சாமி படத்தின் அருகே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது.

கடையினுள் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது சுமார் 25-30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மேற்கூரையில் இருந்து தொங்கிய படி இறங்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்