எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பலியானார். இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.