புதுவெளிச்சம் பெறும் 'பாரம்பரிய உடைகள்'

ஆடைகளுக்கு விதவிதமான வண்ணம் பூசும் கலை நுணுக்கத்தை கற்றுக்கொடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுத்து சாதித்திருக்கிறார், அல்கா சர்மா.

Update: 2022-09-25 12:20 GMT

கிராமத்து ஆடை வடிவமைப்பு கலாசாரத்தை எதிர்வரும் தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது நோக்கம் என்கிறார். அல்கா, ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்.

தென் இந்திய மாநிலங்களிலிருந்து துணிகளை வாங்கி, சாயம் பூசி அழகிய வடிவமைப்பில் தயாரிக்கிறார். பழைய முறையிலான பிளாக் மற்றும் டை முறையையே பின்பற்றி துணிகளை வடிவமைப்பது இவரது சிறப்பம்சம்.

பின்னர் அந்தத் துணிகளில் எம்பிராய்டரி செய்யப்படுகிறது. தயாரித்து முடித்ததும் துணிகள் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு செல்கிறது. இதற்காக நிறுவனம் ஒன்றை தொடங்கி கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிவருகிறார்.

இவரது நிறுவனத்தின் சிறப்பே பாரம்பரிய முறையிலான கையால் அச்சிடப்படும் தாபு முறைதான். ராஜஸ்தான் கைவினைப் பொருட்களின் சிறப்பம்சமும் இந்த தாபு அச்சுதான். தற்போது இந்த நிறு வனத்தில் 300 பேர் பணியாற்றுகிறார்கள்.

இதில் 100 பேர் வீட்டில் இருந்தபடியே பிளாக் பிரிண்ட் செய்வது, தைப்பது, டை அடிப்பது போன்ற பணியைச் செய்கிறார்கள். மீதமுள்ள 200 பெண்கள் பொத்தான் போன்ற ஆடை களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கின்றனர்.

இவர்கள் முப்பது பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து இந்த பணியை செய்கிறார்கள். சேலைகள், சட்டைகள், குர்தாக்கள், மேலாடை, துப்பட்டா, பைஜாமா மற்றும் அதற்குரிய சட்டை ஆகியவற்றை இவரது நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்து அல்கா சர்மா கூறும்போது, "ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ளோம். எங்களது ஆடை உற்பத்தியில் கழிவு என்ற பேச்சுக்கே இடமில்லை. துணியை வீணாக்காமல் பை, பவுச், நகைப் பை போன்றவற்றை செய் கிறோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்