நீருக்கடியில் அஞ்சல் பெட்டி

ஜப்பானின் வகாயாமா பகுதியில் அமைந்துள்ள மீன் பிடி நகரம் சுஸாமியில் கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்தில் தபால் பெட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-23 15:30 GMT

ஜப்பானின் வகாயாமா பகுதியில் அமைந்துள்ள மீன் பிடி நகரம் சுஸாமி. இங்கு சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். கடற்கரை தேசமான இங்கு கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்தில் தபால் பெட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனைக்காகவும், வகாயாமாவை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த தபால் பெட்டி 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்த தபால் பெட்டி வெறும் காட்சி பொருளாக அமைந்திருக்கவில்லை. ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் முதல் 1,500 கடிதங்கள் வரை தபால் பெட்டியில் இருந்து சேகரிக்கப்படுகின்றன.

ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் கடிதங்களை அதில் போடுகிறார்கள். அது சார்ந்த உபகரணங்களை விற்பனை செய்யும் கடை ஊழியர்கள்தான் அந்த தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை சேகரிக்கவும் செய்கிறார்கள். தபால் அட்டைகள் நீரில் சேதமடையாத வகையிலான காகிதத்தில் தயார் செய்யப்படுகின்றன. அதில் எழுதப்படும் எழுத்துக்கள் நீரில் அழியாமல் இருப்பதற்கு ஏற்ப பெயிண்ட் மார்க்கர் பயன்படுத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்