வெளிநாட்டு தாவரங்களில் ஆர்வம் காட்டும் விவசாயி

கர்நாடகாவைச் சேர்ந்த அணில் பலஞ்சா என்ற விவசாயி, 700 வகை வெளிநாட்டு பழமரங்களை வளர்த்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக பண்ணையை நடத்தி வரும் இவர், 40 நாடுகளில் இருந்து இந்த பழச்செடிகளை வரவழைத்து வளர்த்து வருகிறார்.

Update: 2022-08-18 16:24 GMT

இது குறித்து அவர் கூறுகையில், "சிறுவயதில் பலாப்பழம், மாம்பழம் போன்ற பழச்செடிகளை என் தந்தை பயிரிடுவதைப் பார்த்திருக்கிறேன். என் 19 வயதில் ரப்பர், பாக்கு மரம் ஆகியவற்றை வளர்த்தேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையைப் போல், நம் நாட்டுக்கு அரிதான பல வகைப் பழப்பயிர்களை பயிரிட முடிவு செய்தேன்.

மலேசியாவில் இருந்து வெண்ணெய் பழங்கள் மற்றும் சந்தனம், இந்தோனேசியாவில் இருந்து கெப்பல் ஆகியவை வாங்கி வளர்த்தேன். இன்றைக்கு 40 நாடுகளில் இருந்து நண்பர்கள் மூலம் விதைகளைத் தருவித்து, 700-க்கும் மேற்பட்ட பழவகைகளை வளர்த்து வருகிறேன்.

ஒவ்வொரு பழத்தின் விவரத்தையும் குறித்து வைத்துள்ளேன். எந்த சீதோஷ்ண நிலையில் வளரும், மண் வகை, விஞ்ஞான பெயர்கள், மருத்துவ குணம் ஆகியவற்றை விரிவாக பதிவு செய்துள்ளேன். சிறு ஆராய்ச்சி தோட்டமும் நடத்தி வருகிறேன். மலேசியா, கம்போடியா, வியட்நாம், பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்துதான் அதிகமான பழ விதைகளை தருவித்தேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்