உலகின் பழமையான ஆல மரம்

உலகின் மிகவும் பழமையான ஆல மரங்களுள் ஒன்று மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா அடுத்த ஷிப்பூரில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திர போஸ் தாவரவியல் பூங்காவில் உள்ளது.

Update: 2022-07-24 13:51 GMT

இதன் ஆயுளும் நீண்டது. சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இந்த மரம் மட்டுமே 4.67 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

வேர்கள்தான் அதற்கு காரணம். அவை நீண்ட தூரம் பரந்து விரிந்து பிரமாண்டமான பரப்பளவையும், தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. எனினும் இந்த மரத்தின் தண்டு பகுதியை கண்டறிய முடிவதில்லை. இரண்டு முறை சூறாவளி காற்று ஆலமரத்தை தாக்கியது. ஒரு வகை நோய் தாக்குதலும் ஆல மரத்தின் தண்டு பகுதியை சேதப்படுத்திவிட்டது.

நோய் தாக்குதல் மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் 1925-ம் ஆண்டு ஆலமரத்தின் தண்டு பகுதியை அகற்ற வேண்டியதாயிற்று. ஆனாலும் அது மரத்தின் வளர்ச்சியை தடுக்கவில்லை. வேர்களின் துணையுடன் ஆலமரம் பரந்து விரிந்து கிளைகளை பரப்பியது.

இப்போது மொத்தம் 3,772 வேர்கள் ஆலமரத்தை தாங்கி நிற்கின்றன. இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மரங்கள் உள்ளன. ஆனாலும் ஆலமரத்தின் பிரமாண்ட தோற்றத்துக்கு மற்ற மரங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

1787-ம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனியை சேந்த கர்னல் ராபர்ட் கைட் என்பவர் தேயிலை, தேக்கு போன்ற வணிக ரீதியாக தாவர வகைகளை வளர்க்கும் நோக்கத்தில் இந்த தோட்டத்தை நிறுவினார். அவர்தான் இந்த ஆலமரத்தையும் நட்டார்.

ஆனால் அதுதான் உலகிலேயே மிகப்பெரிய ஆலமரமாக மாறும் என்பது அவருக்கு தெரியாது. அந்த அளவுக்கு நீண்டு வளர்ந்துவிட்டது. இந்த தாவரவியல் பூங்கா 2009-ம் ஆண்டு இயற்கை விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸின் நினைவாக அவரது பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்