லம்போர்கினி ஹுராகேன் டெக்னிகா

பிரிமீயம் ஸ்போர்ட்ஸ் கார்களில் லம்போர்கினி எப்போதுமே பிரபலமானது. இந்நிறுவனம் தற்போது ஹுராகேன் டெக்னிகா என்ற பெயரிலான புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-04-20 15:00 GMT
பின்புற சக்கரங்களுக்கு ஸ்டீரிங் வசதி கொண்ட அடுத்த தலைமுறை மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வேடிக்கை, சாகசத்தை மட்டுமின்றி பந்தய மைதானத்திலும் கலக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது மிகவும் ஏற்றது. காற்றை கிழித்துச் செல்ல ஏதுவாக இது ஏரோ டைனமிக் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. எடை குறைவாகவும் (1,379 கி.கி.) இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள வி 10 என்ஜின் 565 நியூட்டன் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தக் கூடியது. இதை ஸ்டார்ட் செய்து 3.2 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். பிரேக் குளிர்விக்கும் தொழில்நுட்பம், பின்சக்கர சுழற்சிக்கு ஸ்டீரிங் வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும்.

இது 10 சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. இரட்டை ஏர்பேக், முழங்காலைக் காக்கும் ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங் களைக் கொண்டது. 7 கியர்களைக் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கி.மீ. ஆகும். இதன் நீளம் 4,567 மி.மீ., அகலம் 1,933 மி.மீ., உயரம்1,165 மி.மீ. பெட்ரோல் டேங்க் 80 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

மேலும் செய்திகள்