ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் கரோலினா மரின்
ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது
மேட்ரிட்:
ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோரை சந்தித்தார்.
இந்த ஆட்டத்தில் கரோலினா மரின் 21-10, 21-12 என்ற நேர் செட்களில் கிர்ஸ்டி கில்மோரை வீழ்த்தி , சாம்பியன் பட்டம் வென்றார்.