தொழில்நுட்ப கோளாறு: மின்சார ரெயில் சேவை பாதிப்பு
மும்பை மத்திய ரெயில்வே வழிதடத்தில் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது;
மும்பை,
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பாண்டுப்-நாகூர் இடையே திடீரென தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் மும்பை நோக்கி சென்ற மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் அங்கு சென்று கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடம் கழித்து கோளாறை சரிசெய்த பின்னர் ரெயில்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதைத்தவிர சோலாப்பூரில் இருந்து மும்பை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று நேற்று காலை பத்லாப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்தது. அப்போது பயணி ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து உள்ளார். இதனை அறிந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை பத்லாப்பூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தினார். இதன் காரணமாக காலை நேரத்தில் மும்பை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.