8 மாடி கட்டிடத்தின் தூண்களில் திடீர் விரிசல்; 120 குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் - தானே மாநகராட்சி நடவடிக்கை

தானே மும்ரா பகுதியில் உள்ள 8 மாடி கட்டிடத்தின் தூண்களில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் அங்கு தங்கியிருந்த 120 குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்

Update: 2023-07-30 19:00 GMT

தானே, 

தானே மும்ரா பகுதியில் உள்ள அல்மாஸ் காலனியில் 20 ஆண்டுகள் பழமையான 8 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் மொத்தம் 45 வீடுகள் உள்ளன. இந்தநிலையில் இந்த கட்டிடத்தின் தூண்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தானே மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கட்டிடத்தை ஆய்வு செய்தனர். இதில் கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்து, அந்த கட்டிடத்தில் வசித்து வந்த 120 பேரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். மேலும் அந்த வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு வசித்து வந்தவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கட்டிடம் நகரில் உள்ள ஆபத்தான கட்டிடங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாநகராட்சியினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்தின் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகத்தை துண்டித்தனர். இந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் செல்போன் சேவை கோபுரங்கள் 3 உள்ளன. அவற்றை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கட்டிட அலுவலக பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்