புனேயில் மாணவியை கற்பழித்ததாக பள்ளி பஸ் டிரைவர் கைது
புனேயில் 15 வயது மாணவியை கற்பழித்ததாக பள்ளி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
மும்பை,
புனேயில் 15 வயது மாணவியை கற்பழித்ததாக பள்ளி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
15 வயது மாணவி
புனேயில் உள்ள கோந்த்வா பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் தான் படிக்கும் பள்ளிக்கூட பஸ்சில் பள்ளிக்கு செல்வதும், பின்னர் அதில் வீடு திரும்புவதும் வழக்கம். அந்த பஸ்சை 35 வயது டிரைவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் அவர் 15 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகியதுடன் அந்த மாணவியை பல தடவை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
கைது
முதலில் இதை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்த மாணவி, பின்னர் சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளுடன் கோந்த்வா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.