காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோருவது பற்றி ஆலோசிக்கவில்லை -

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோருவது பற்றி ஆலோசிக்கவில்லை என மாநில பொறுப்பாளர் எச்.கே. பாட்டீல் கூறியுள்ளார்.

Update: 2023-07-04 19:15 GMT

மும்பை,

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோருவது பற்றி ஆலோசிக்கவில்லை என மாநில பொறுப்பாளர் எச்.கே. பாட்டீல் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்த நேற்று மும்பையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மராட்டிய மாநில பொறுப்பாளர் எச்.கே. பாட்டீல் கலந்து கொண்டார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 45 எம்.எல்.ஏ.க்களில் கட்சியின் சட்டசபை தலைவர் உள்பட 39 பேர் கலந்து கொண்டனர்.

ஆலோசிக்கவில்லை

கூட்டத்தில் மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் உரிமை கோருவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோருவது குறித்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக எச்.கே. பாட்டீல் கூறியதாவது:-

நாங்கள் மகாவிகாஸ் அகாடி கூட்டணி மற்றும் காங்கிரசை பலப்படுத்த உள்ளோம். நாங்கள் உத்தவ் தாக்கரே, சரத்பவாருக்கு ஆதரவளித்து உள்ளோம். வரும் நாட்களில் நடக்க உள்ள அரசியல் மாற்றங்களை காத்திருந்து பார்க்க உள்ளோம். சட்டசபை எதிா்க்கட்சி தலைவர் பதவியை உரிமை கோருவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. மக்கள் பிரச்சினைகளை வெளியே கொண்டு வர காங்கிரஸ் உழைக்கும். அரசியல்சாசனத்துக்கு எதிரான மற்றும் நெறியற்ற இந்த ஆட்சி, பா.ஜனதாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்