மாடு மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது விபத்து:- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி
லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியாகினர்.;
சந்திராப்பூர்,
லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியாகினர்.
சாலையின் நடுவே நின்ற மாடு
கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் பட்கே (வயது26). இவரது நண்பர் அனுப் (35), இவரது மனைவி மகேஸ்வரி (24) மைத்துனர் மனோஜ் (29), மைத்துனரின் நண்பர் சுரேந்திர மேஸ்ராம் (23) என 5 பேருடன் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்க சந்திராப்பூருக்கு காரில் புறப்பட்டு சென்றனர். அங்கு பொருட்களை வாங்கி விட்டு வீடு திரும்பினர்.
கட்சிரோலி-சந்திராப்பூர் நெடுஞ்சாலையில் கிசான் நகர் அருகே கார் சென்ற போது சாலையின் நடுவே மாடு ஒன்று நின்றது.
4 பேர் பலி
இதனை கவனித்த பங்கஜ் மாடு மீது மோதாமல் இருக்க காரை ஒரு பக்கமாக திருப்பி உள்ளார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பங்கஜ், நண்பர் அனுப், மனைவி மகேஸ்வரி, மைத்துனர் மனோஜ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடன் இருந்த மைத்துனரின் நண்பர் சுரேந்திர மேஸ்ராம் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்த சாலோலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.