மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் லாரி மோதி 3 பேர் பலி

மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 3 பேர் பலியாகினர்.;

Update:2023-02-15 00:15 IST

வசாய், 

மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 3 பேர் பலியாகினர்.

ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம்

மும்பையில் இருந்து 120 கி.மீ. தொலைவில் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை தகானு தாலுகா சாரோட்டி பகுதியில் அப்பகுதியை சேர்ந்த 3 பேர் நேற்று காலை 8.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். எதிர்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் செல்வதற்காக சாலையின் தடுப்பு சுவரின் ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக டிரைலர் லாரி வந்து கொண்டிருந்ததை பார்த்த அவர்கள் வேகமாக சாலையை கடக்க முயன்றனர்.

லாரி மோதி 3 பேர் பலி

ஆனால் வேகமாக வந்த லாரி சாலையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் லாரியின் அடிப்பகுதியில் சிக்கியதால் அதில் இருந்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்தினை நேரில் கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த காசா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்