மைசூருவில் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை

மைசூருவில் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-20 20:32 GMT

மைசூரு:-

முன்விரோதம்

மைசூரு மாவட்டம் நஜர்பாத் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வித்யா நகர லே-அவுட் பகுதியை சோ்ந்தவர் பால்ராஜ்(வயது 28). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த தேஜஸ் என்பருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நஜர்பாத் பகுதியில் தேஜஸ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பால்ராஜ் வந்தார். இதில் பால்ராஜ் தேஜஸ் இடையே தகராறு ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆயுதங்களால் தாக்கி...

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பால்ராஜ் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தேஜஸ் மற்றும் அவரது நண்பர்கள் சஞ்சய், கிரண், சாம்ராட் ஆகியோர் பால்ராைஜ வழிமறித்து தகராறு செய்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து, பால்ராஜை கொடூரமாக தாக்கினர். பால்ராஜ் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து தேஜஸ் அவர் நண்பர்களுடன் அங்கிருந்து தப்பி சென்றனர்.

வழக்குப்பதிவு

இதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நஜர்பாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பால்ராஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்