திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி இளைஞர்கள் 160 கி.மீ பாதயாத்திரை

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் உள்ளனர்.

Update: 2023-11-06 04:05 GMT

பெங்களூரு,

தற்போதைய காலக்கட்டத்தில் திருமண விஷயங்களில் பெண்களின் எதிர்பார்ப்பு எகிற தொடங்கி உள்ளது. தங்களது வருங்கால கணவர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும். சொந்த கார், வீடு என ஆடம்பர வாழ்க்கையை வழங்குபவராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன் காரணமாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் உள்ளனர்.

இந்தநிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை. விவசாயம் செய்வதால் அவர்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 160 கி.மீ தூரத்தில் உள்ள மாதேஸ்வரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர். தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும்; நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்