தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா, ராயலசீமா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக வெயிலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.