சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்துக்கு எதிரான ரிட் மனு: அக்டோபர் 18-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்துக்கு எதிரான ரிட் மனுவை அக்டோபர் 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-26 22:48 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்துக்கு எதிராக ஒரு அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், ஒரு தலைபட்சமாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் உள்ளது. எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் தத்தர் ஆஜரானார். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அது தொடர்பான விசாரணையை அக்டோபர் 18-ந் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், இதே விவகாரம் தொடர்புடைய மனுக்களை தாக்கல் செய்த வக்கீல்களுக்கும் அதுகுறித்த தகவலை தெரிவிக்கவும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்