மனைவி உள்பட 5 பேர் மீது தொழிலாளி புகார்

குடும்பத்தினர் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் இது குறித்து விசாரணை நடத்த கர்நாடக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-03 21:06 GMT

பெங்களூரு:-

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் தீபக்(வயது 28). இவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், சுனிதா கிரேஸ் என்ற பெண்ணுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது. ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை நன்றாக சென்றது. தீபக் வேலை காரணமாக பிற மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதுகுறித்து அவரது மனைவியிடம் அவர் கூறிவிட்டு செல்வார். ஆனால் கிரேஸ், தீபக் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்றபின்னர், தனது கணவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்து வந்துள்ளார்.மேலும், அவரது கணவர் பெயரில் வங்கி உள்பட பல்வேறு இடங்களில் கடன் பெற்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். இதுகுறித்து தீபக்கிற்கு தெரியவந்தது. அவர், தனது மனைவியிடம் அதுகுறித்து கேட்டால், கிரேஸ் வாக்குவாதம் செய்வதுடன், தீபக்கின் தாய் மற்றும் சகோதரரை தரக்குறைவாக பேசி வந்துள்ளார். மேலும், தீபக், அவரது குடும்பத்தினரை மதம் மாறுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் தம்பதிக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரை மதமாற்ற முயற்சி செய்துள்ளார். இதனால் மனமுடைந்த தீபக் தனது மனைவி மீது பெங்களூரு கோர்ட்டில் புகார் அளித்தார். அப்போது அவர் தனது மனைவி உள்பட 5 பேர் தன்னையும், குடும்பத்தினரையும் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக குற்றம்சாட்டினார். அதை கேட்டறிந்த நீதிபதி, தீபக்கின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்து மதமாற்ற விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார்

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்