மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
மூடிகெரேயில் மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா மரசனிகெரே கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. தொழிலாளி. இவரது மனைவி சுமித்ரா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் குருமூர்த்தி கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் குருமூா்த்தி மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும், சுமித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. அப்போது குருமூர்த்தி, சுமித்ராவை தாக்கி உள்ளார்.
இதில் கோபமடைந்த சுமித்ரா அதேப்பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை குருமூா்த்தி சுமித்ராவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு சுமித்ராவை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அப்போது சுமித்ராவின் அண்ணன் குருமூர்த்தியிடம் தகராறு செய்து அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து சுமித்ரா பனகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கொடுமை என வழக்குப்பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.