சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும்

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-03 19:00 GMT

சிக்கமகளூரு;


சித்தராமையா பேட்டி

முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா சிக்கமகளூருவுக்கு நேற்று வந்தார். தனியார் ஓட்டலில் வைத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் போட்டியிட, வருகிற 15-ந்தேதி முதல் கட்சியை சேர்ந்த யார் வேண்டுமானாலும் சீட் கேட்டு விண்ணப்பிக்கலாம். அதனை கட்சி மேலிடம் பரிசீலித்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும். சட்டசபை தேர்தலில் நான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கட்சி மேலிடம் எந்த தொகுதியில் நிற்க கூறுகிறதோ அங்கு போட்டியிடுவேன்.

மக்கள் ஏமாறமாட்டார்கள்

கர்நாடக பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் பற்றி கடிதம் அனுப்பியும் பிரதமர் மோடி நடவடிக்கையும் எடுக்கவில்லை.பா.ஜனதா உள்பட மற்ற கட்சிகளில் இருந்து யார் வந்தாலும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். ஆனால் அவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் வழங்குவது பற்றி கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.

தற்போது கர்நாடகத்தில் இடஒதுக்கீடு அதிகரிப்பு விஷயத்தில் அரசியல் நடக்கிறது. இதற்கு மக்கள் ஏமாறமாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியின்போது முன்னாள் மந்திரி பி.எல்.சங்கர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்சுமந்த் ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்