முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மவுனம் காப்பது ஏன்?

கர்நாடக கிராமங்களுக்கு மராட்டிய அரசு ரூ.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மவுனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை.

Update: 2023-03-15 18:45 GMT

பெங்களூரு;-

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக எல்லைக்குள் உள்ள கிராமங்களில் வளர்ச்சி பணிகளுக்கு மராட்டிய மாநில அரசு ரூ.54 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அங்குள்ள கிராமங்களை கர்நாடக பா.ஜனதா அரசால் வளர்ச்சி செய்ய முடியாது என்பதால் மராட்டிய அரசு நிதி ஒதுக்கியுள்ளதா?. இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பதன் மூலம் கன்னடர்களின் சுயமரியாதையை மராட்டிய அரசின் காலடியில் அடமானம் வைத்துள்ளதா?. இந்த விஷயத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மவுனமாக இருப்பது ஏன்?.

இந்த விஷயத்தில் மராட்டிய அரசை உள்துறை மந்திரி அமித்ஷா தூண்டி விட்டுள்ளாரா?. சமீபத்தில் அமித்ஷா பெலகாவுக்கு வருகை தந்தார். இன்று (நேற்று) பெலகாவியில் சுற்றுப்பயணம் செய்யும் பசவராஜ் பொம்மை, கர்நாடகத்தின் நலனை காக்க நடவடிக்கை எடுப்பாரா?.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்