சாகரில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேர் கைது

சாகர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-13 18:45 GMT

சிவமொக்கா-

சாகர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

வனத்துறைக்கு சொந்தமான இடம்

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா கசபா ஹோப்ளி மடசூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து சாகர் தாசில்தார் மகேஷ் பூஜாரிக்கு புகார் சென்றது. அந்த புகாரின் பேரில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றி கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு மர்மநபர்கள் 7 பேர் அரசு அதிகாரிகளை அவதூறாக பேசியுள்ளனர். அவர்கள் அரசு அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்து உள்ளனர். மேலும் அரசு அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தாசில்தார் மகேஷ் பூஜாரி சாகர் புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேரை தேடி வந்தனர்.

7 பேர் கைது

இந்தநிலையில் சாகர் பகுதியில் பதுங்கி இருந்த மடசூர் கிராமத்தை சேர்ந்த உச்சப்பா, ஆனந்த், கங்காதரா, தேவராஜ், வீரேந்தரா, உமேஷ், மற்றும் லங்கேஷ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் இருந்த மரங்களை கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் சாகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்