'பா.ஜ.க.வின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம்' - ராகுல் காந்தி

பா.ஜ.க.வின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-20 13:21 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"அரசியலமைப்பு சட்டத்தையும், இடஒதுக்கீட்டு முறையையும் எப்படிப்பட்ட சூழலிலும் பாதுகாப்போம். பா.ஜ.க.வின் 'நேரடி நியமன திட்டம்' போன்ற அனைத்து சதிகளையும் முறியடிப்போம்.

நான் மீண்டும் சொல்கிறேன், 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை உடைத்து, சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை உறுதி செய்வோம்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Full View


Tags:    

மேலும் செய்திகள்