'இந்து கோவில்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை தீவிரமாக கையாள்கிறோம்' - ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன்

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைப்புகள் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பிலிப் கிரீன் கூறினார்.

Update: 2023-12-13 22:03 GMT

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் சில மாதங்களுக்கு முன்பு இந்து கோவில்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, கோவில்களை சேதப்படுத்தியது தொடர்பான செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பிரதமர் மோடி, கடந்த மே மாதம் தனது ஆஸ்திரேலிய பயணத்தின்போது, அந்நாட்டின் அதிபர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, பிரிவினைவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் தூதரும், உயர் ஆணையருமான பிலிப் கிரின், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்தபோது அவர் கூறியதாவது;-

"ஆஸ்திரேலியாவில் எந்தவொரு மதம் சார்ந்த விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படுவதைப் போலவே, இந்து கோவில்கள் மீதான தாக்குதல் விவகாரத்தையும் நாங்கள் தீவிரமாக கையாள்கிறோம். எங்கள் காவல்துறை, உளவுத்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அமைப்புகள் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்