ஜனநாயகத்தை காக்கவே போராடி வருகிறோம்: திருச்சி சிவா எம்.பி.பேட்டி
வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது என திருச்சி சிவா எம்.பி. கூறினார்.;
புதுடெல்லி,
பா.ஜ.க.விற்கு எதிராக "இந்தியா கூட்டணி" உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கூட்டணி கட்சி உறுப்பினர்கள், சஸ்பெண்ட் ஆன எம்.பி.க்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து திருச்சி எம்.பி. சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவதுபோல் சித்தரிக்கின்றனர். ஜனநாயகத்தை காக்கவே நாங்கள் போராடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.