கோரக்பூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தைக் குட்டிக்கு உணவூட்டிய யோகி ஆதித்யநாத்- வைரல் வீடியோ

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் உயிரியல் பூங்காவில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-10-05 14:05 GMT

கோரக்பூர்,

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் உயிரியல் பூங்காவில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது யோகி ஆதித்யநாத் அங்கு இருந்த ஒரு சிறுத்தைக் குட்டிக்கு உணவூட்டினார். இது குறித்த வீடியோவை உத்தர பிரதேச அரசு தங்களது அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் ஒருவர் சிறுத்தைக்குட்டியை முதல் மந்திரியிடம் வழங்குகிறார். பாதுகாப்பான ரப்பர் கையுறைகளை அணிந்துள்ள யோகி ஆதித்யநாத் சிறுத்தைக் குட்டிக்கு டப்பாவில் பால் வழங்குகிறார்.

Full View

சிறுத்தை குட்டி ஆரம்பத்தில் பால் குடிக்க தயங்குகிறது. பின்னர் கால்நடை மருத்துவர், மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறுத்தை குட்டியை பிடித்திருக்க யோகி ஆதித்யநாத் டப்பாவில் வழங்கும் பாலை சிறுத்தை குட்டி குடிக்கின்றது. இது குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்