ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியில் கடந்து சென்ற 12 யானைகள் - வைரலாகும் வீடியோ
ஒடிசாவின் ஜார்சுகுடாவில் 12 யானைகள் குடியிருப்புப் பகுதியைக் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜார்சுகுடா,
ஒடிசாவின் ஜார்சுகுடாவில் உள்ள பிரஜ்ராஜ்நகர் குடியிருப்புப் பகுதிகளை சுமார் 12 யானைகள் கொண்ட கூட்டம் நேற்று இரவு கடந்து சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சுமார் 12 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று அமைதியான முறையில் குடியிருப்புப் பகுதிகளை கடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வனவிலங்குகள் உணவு அல்லது தண்ணீரைத் தேடி யானைகள் நகரங்களுக்கு வரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. யானைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்வது முக்கியம்.
முன்னதாக, அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள நெல் வயலில் நுழைந்த காட்டு யானையை குடிபோதையில் இருந்த உள்ளூர் மனிதர் ஒருவர் துரத்த முயன்ற போது தாக்கியது. இந்த தாக்குதலில் லேசான காயங்களுடன் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.