சிறுமி பாலியல் வன்கொடுமை - பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவான பாஜக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் சாம்ப்வட் மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி கமல் ராவத். இவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக கமல் ராவத் மீது சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கமல் ராவத் தலைமறைவானார்.
தலைமறைவான பாஜக நிர்வாகி கமல் ராவத்தை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.